தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் தொடர்; ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் சேர்ப்பு..!!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் தொடர்; ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட்  சேர்ப்பு..!!
x

image courtyesy; AFP

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டி20 தொடர் முடிவடைந்த பின் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட 50 ஓவர் தொடர் நடைபெற உள்ளது. 50 ஓவர் தொடரில் காயத்தால் பல முன்னணி வீரர்கள் விலகிய நிலையில் டி20 போட்டிகளில் சிறந்த வீரரான ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் டிம் டேவிட் அணியில் சேர்க்கப்படுவது இது தான் முதல் முறை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 64 ரன்கள் குவித்ததன் மூலம் இவர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


Next Story