16 நாட்களில் 6 ஆட்டங்கள் - பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து மில்னே விலகல்


16 நாட்களில் 6 ஆட்டங்கள் - பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து மில்னே விலகல்
x

Image Courtesy: @BLACKCAPS

பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆடம் மில்னே விலகி உள்ளார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது.

பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்தத் தொடர்களில் இருந்து ஆடம் மில்னே விலகி உள்ளார். இந்த இரு தொடர்களிலும் 16 நாட்களில் 6 ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

இந்த தொடர்களுக்கு தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் இரு தொடர்களில் இருந்தும் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார். இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடம் மில்னேவுக்கு பதிலாக பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடி வரும் பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story