ஓய்வு அறிவித்த பின்பும் கடமை தவறாத நியூசிலாந்து வீரர்


ஓய்வு அறிவித்த பின்பும் கடமை தவறாத நியூசிலாந்து வீரர்
x

image courtesy; twitter/@ICC

தினத்தந்தி 29 Feb 2024 3:42 PM IST (Updated: 29 Feb 2024 3:50 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

வெலிங்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்க்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் மாற்று வீரராக (சப்ஸ்டியூட்) ஓய்வை அறிவித்த நீல் வாக்னர் களமிறங்கினார். ஓய்வு முடிவை அறிவித்த பின்பும் கடமை தவறாத இவரது இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நீல் வாக்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story