இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆப்கான் முன்னனி வீரர் விலகல்


இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆப்கான் முன்னனி வீரர் விலகல்
x
தினத்தந்தி 1 Jun 2023 4:18 PM IST (Updated: 1 Jun 2023 5:32 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

கொழும்பு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். ஜூன் 7-ந் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அனைத்து போட்டியிலும் (17 போட்டிகள்) விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story