20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா...வெல்லப்போவது யார்..?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.
மும்பை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும், இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததன் மூலம் இந்தியா ஐசிசி நடத்தும் டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளதன் மூலம் 20 வருடங்களுக்கு பின்னர் ஐசிசி நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் கடைசியாக 2003ல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. உலக டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.