ஆஷஸ் 4வது டெஸ்ட்; பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி...!
நடப்பு ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
லண்டன்,
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.
4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்:-
பென் டக்கட், ஜேக் க்ராவ்லி, மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Related Tags :
Next Story