ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு...!


ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு...!
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 17 Sept 2023 2:38 PM IST (Updated: 17 Sept 2023 2:57 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி), இலங்கை (2 வெற்றி, ஒரு தோல்வி) தலா 4 புள்ளிகள் பெற்றன. ரன்-ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

ரன்-ரேட் அடிப்படையில் வங்காளதேசம் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 2 தோல்வி) 4-வது இடமும் பெற்று நடையை கட்டின. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.


Next Story