இலங்கை நெருக்கடி : ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் ?

Image Courtesy : ICC
ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு,
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினை, மக்கள் போராட்டம், அரசியல் மாற்றங்கள் என்று நெருக்கடியான சூழல் நிலவுவதால் இந்த போட்டி அங்கு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது உறுதியாகவில்லை. இந்த போட்டியை திட்டமிட்டப்படி இலங்கையில் நடத்துவதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர முனைப்புடன் இருந்தது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா தற்போது கூறுகையில் ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.






