ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் - இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை...!


ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் - இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை...!
x

Image Courtesy: AFP 

பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளனர்.

துபாய்,

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளனர். அதாவது இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்சில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இதுவே முதல் நிகழ்வாகும்.

இதற்கு முன் ஆகஸ்ட் 7-ந் தேதி நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி-20 போட்டியில் அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தனர்.

அந்த ஆட்டத்தில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இதன் மூலம், சர்வதேச டி-20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இதுவே முதல்முறை என்ற சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செய்திருந்தனர்.


Next Story