ஆசிய கோப்பை : காயம் காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா விலகல்

Image Courtesy: Sri Lanka Cricket
இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக கருதப்படும் துஷ்மந்தா சமீரா விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
துபாய்,
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் வரும் 27-ந் தேதி ஆப்கானிஸ்தானை எதிர் கொள்கிறது.
இந்த தொடருக்கான இலங்கை அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பயிற்சியின் போது அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நுவான் துஷாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






