ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு ஆண் குழந்தை...!!

image courtesy;AFP
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேல்ஸ்வெல்லுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிட்னி,
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.
மேக்ஸ்வெல் தமிழ்ப்பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியிருந்தார். அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், மேக்ஸ்வெல்-வினி ராமன் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனை மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். குழந்தைக்கு லோகன் மேவரிக் மேக்ஸ்வெல் என பெயரிட்டுள்ளார்.
Related Tags :
Next Story






