ஆயுஷ் பதோனி அரைசதம்...லக்னோ 167 ரன்கள் சேர்ப்பு


ஆயுஷ் பதோனி அரைசதம்...லக்னோ 167 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: AFP

லக்னோ தரப்பில் அபாரமாக ஆடிய ஆயுஷ் பதோனி அரைசதம் அடித்தார்.

ஆலக்னோ,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று லக்னோவில் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய படிக்கல் 3 ரன், ஸ்டாய்னிஸ் 8 ரன், பூரன் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 39 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக தீபக் ஹூடா ஆயுஷ் பதோனியுடன் ஜோடி சேர்ந்தார். இதில் ஹூடா 10 ரன் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து களம் இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட உள்ளது.

1 More update

Next Story