கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது வங்கதேசம்...!


கடைசி ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது வங்கதேசம்...!
x

Image Courtesy: @BCBtigers

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

சட்டோகிராம்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரெ ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வங்கதேச அணி கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் முதல் ஒரு போட்டிகளின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 6 ரன், இப்ராகிம் ஜட்ரான் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா 0 ரன், ஹஸ்மத்துல்லா ஷாகிடி 22 ரன், முகமது நபி 1 ரன், நஜிபுல்லா ஜட்ரான் 10 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து அஸ்மத்துல்லா உமர்சாய் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 56 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மத்துல்லா உமர்சாய் 56 ரன்கள் அடித்தார். வங்காளதேச தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆடியது.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது நைம் 0 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து லிட்டன் தாஸ் உடன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷாண்டோ 11 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் 39 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் வங்காளதேச அணி 23.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 129 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. வங்கதேச தரப்பில் லிட்டன் தாஸ் 53 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 14ம் தேதி தொடங்குகிறது.


Next Story