இந்திய கிரிக்கெட் அணியின் புதிய முதன்மை ஸ்பான்சராக 'டீரீம் லெவன்' நிறுவனம்...!!!


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய முதன்மை ஸ்பான்சராக டீரீம் லெவன் நிறுவனம்...!!!
x

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக ‘டீரீம் லெவன்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறித்துள்ளது.

மும்பை,

கடந்த மார்ச் மாதம் வரை 'பைஜுஸ்' நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக இருந்தது. ஒப்பந்தம் காலாவதியான நிலையில் பல பிரபல நிறுவனங்கள் முதன்மை ஸ்பான்சர் இடத்திற்கு போட்டி போட்டன.

இந்நிலையில் உலகின் பணக்கார நிறுவனங்களுள் ஒன்றான 'டீரீம் லெவன்', இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

2023-2025க்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, முதல் போட்டியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடுகிறது. ஜுலை 12-ம் தேதி தொடங்கும் இது 2 போட்டிகள் கொண்ட தொடர் ஆகும்.

அந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து, இந்திய அணியின் ஜெர்சியில் டீரீம் லெவன் விளம்பரம் இடம்பெறும் எனவும், 3 ஆண்டு காலத்திற்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் இடத்தை கடந்த 2019-ம் ஆண்டு பிரபல செல்போன நிறுவனமான 'ஓப்போ'-விடம் இருந்து 'பைஜுஸ்' கைப்பற்றியிருந்தது. மூன்று ஆண்டுகள் நீடித்த இது தற்போது முடிவிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story