யு-19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ


யு-19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
x
தினத்தந்தி 26 Nov 2023 3:28 AM IST (Updated: 26 Nov 2023 3:35 AM IST)
t-max-icont-min-icon

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

மும்பை,

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8-ம் தொடங்கி 17 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் (ஏ பிரிவு) ஆப்கானிஸ்தான், நேபாளம், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் (பி பிரிவு) உள்ளிட்ட 8 அணிகள் விளையாட இருக்கின்றன. இதில் முதல் 4 இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அதில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

யு-19ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி;

உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லே அவனீஷ் ராவ், சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌதா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

1 More update

Next Story