விராட் கோலி பிறந்தநாள்...பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடும் பெங்கால் கிரிக்கெட் வாரியம்...!


விராட் கோலி பிறந்தநாள்...பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடும் பெங்கால் கிரிக்கெட் வாரியம்...!
x

image courtesy: AFP

விராட் கோலி பிறந்தநாளன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

கொல்கத்தா,

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. தற்போது உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி வருகிறார். இவர் நவம்பர் 5, 1988ம் ஆண்டு பிறந்தார். இந்நிலையில் விராட் கோலி பிறந்தநாளன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் விராட் கோலியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா ஆட்டம் நடைபெறும் ஈடன் கார்டன்ஸ் மைதானம் 70,000 ரசிகர்கள் அமரும் வகையில் உள்ளது. இந்நிலையில் ஆட்டத்தை காண வரும் 70,000 ரசிகர்களுக்கும் கோலியின் முகம் போன்ற முகமூடியை வழங்க பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இன்னிங்ஸ் இடைவேளையின்போது வாணவேடிக்கைகளும், கேக் வெட்டவும் திட்டமிடபட்டுள்ளதாகவும் பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு ஐசிசியின் அனுமதி கிடைத்தால் அந்த நாளை கோலிக்கு சிறப்பானதாக மாற்றுவோம் என பெங்கால் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story