தோனி ரசிகர்களுக்கு செம்ம விருந்து...12ம் தேதி வெளியாகும் தோனி படம்...!
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி ஆடி வருகிறார்.
சென்னை,
ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி சென்னை அணி விளையாடும் மற்ற மைதானங்களில் கூட சென்னை அணியின் ரசிகர்கள் சூழ்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பு என்னவென்றால் எம்.எஸ். தோனி படம் வருகிற 12ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. 2016ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான M.S. Dhoni: The Untold Story திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில், ஐபிஎல்லில் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வரும் சூழலில், படத்தை வரும் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழு மகிழ்ந்துள்ளது.