பார்டர்-கவாஸ்கர் டிராபி: 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3/0... இந்தியாவை விட 88 ரன் பின்தங்கிய நிலை...!


பார்டர்-கவாஸ்கர் டிராபி: 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3/0... இந்தியாவை விட 88 ரன் பின்தங்கிய நிலை...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 12 March 2023 11:48 AM GMT (Updated: 12 March 2023 12:10 PM GMT)

இந்தியா தனது முதல் இன்னிங்சில் 571 ரன்கள் எடுத்தது, விராட் கோலி 186 ரன்கள் குவித்து அசத்தினார்.

அகமதாபாத்,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. விராட்கோலி 59 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஜடேஜா 28 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் பரத் களம் இறங்கினர். பொறுமையாக ஆடிய அவர் முதலாவது அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னில் அவுட் ஆனார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பதிவு செய்தார். பரத்தை தொடர்ந்து களம் புகுந்த அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் 79 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அஷ்வின் 7 ரன்னிலும், உமேஷ் யாதவ் 0 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கோலி இரட்டை சதத்தை நெருங்கிய தருவாயில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் அவர் இரட்டை சதம் அடிப்பாரா என ரசிகர்கள் பதற்றத்துடன் ஆட்டத்தை பார்த்தனர். இறுதி விக்கெட்டாக கோலியுடன் ஷமி ஜோடி சேர்ந்தார். காயம் காரணமாக ஸ்ரேயஸ் அய்யர் பேட்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்ந்தார். இறுதியில் இந்திய அணி 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் கோலி 186 ரன்னும், கில் 128 ரன்னும் எடுத்தனர். முதல் இன்னின்ஹ்சில் இந்திய அணி 91 ரன் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4ம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் ரன்னும், குன்னெமன் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நாளை கடைசி மற்றும் 5ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.



Next Story