டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பட்லர் - ஹேல்ஸ் ஜோடி புதிய சாதனை..!

தென் ஆப்பிரிக்காவின் டிகாக்-ரூசவ் ஜோடி அடித்த 168 ரன்கள் என்ற முந்தைய சாதனையையும், பட்லர்-ஹேல்ஸ் ஜோடி முறியடித்து உள்ளது.
அடிலெய்டு,
8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி புதிய சாதனை படைத்து உள்ளது.
அரையிறுதியில் முதல் விக்கெட்டுக்கு 170 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு இந்த ஜோடி வெற்றி தேடித்தந்தது. தென் ஆப்பிரிக்காவின் டிகாக்-ரூசவ் ஜோடி அடித்த 168 ரன்கள் என்ற முந்தைய சாதனையையும், பட்லர்-ஹேல்ஸ் ஜோடி முறியடித்து உள்ளது.
Related Tags :
Next Story