நேபாளம் அணிக்கு எதிராக சதம்..! புதிய சாதனை படைத்த பாபர் அசாம்
இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதின
கராச்சி,
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார் .131 பந்துகளில் பாபர் அசாம் , 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 19-வது சதம் ஆகும் . 102 இன்னிங்ஸ் விளையாடி 19 சதங்களை பதிவு செய்ததன் மூலம் அவர் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஹசீம் அம்லா - 104 இன்னிங்ஸ் , விராட் கோலி - 124 இன்னிங்ஸ்ஆடி 19 சதங்கள் பதிவு செய்தனர் .