சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதல்: சென்னையில் நாளை ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை..!


சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதல்: சென்னையில் நாளை ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை..!
x

சென்னையில் நாளை (செவ்வாய்கிழமை) ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story