டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலி: இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா

image courtesy:AFP
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கொழும்பு,
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முன்னாள் சாம்பியன் ஆன இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. லீக் சுற்றில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றிருந்த அந்த அணி ஒரு வெற்றி, 2 தோல்விகள் மற்றும் ஒரு முடிவில்லை என 3 புள்ளிகள் மட்டுமே பெற்று வெளியேறியது.
உலகக்கோப்பையில் இலங்கையின் மோசமான செயல்பாடு இதுவாகும். இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் அந்த அணியின் ஆலோசகாராக நியமிக்கப்பட்டிருந்த இலங்கை முன்னாள் வீரரான ஜெயவர்த்தனேவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Related Tags :
Next Story






