கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: அகர்சன் கல்லூரி அணி வெற்றி


கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: அகர்சன் கல்லூரி அணி வெற்றி
x

கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அகர்சன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மேக்னா கல்லூரி ஆதரவுடன் கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மாகரலில் உள்ள மேக்னா கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. 14 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் எஸ்.கே.ஆர். என்ஜினீயரிங் -அகர்சன் கல்லூரி அணிகள் மோதின.

முதலில் ஆடிய எஸ்.கே.ஆர். அணி 15.3 ஓவர்களில் 53 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய அகர்சன் கல்லூரி 10.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மற்ற ஆட்டங்களில் டி.ஜே.எஸ். என்ஜினீயரிங் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சிந்து கல்லூரியையும், வேல்டெக் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயா என்ஜினீயரிங்கையும், நசரேத் கல்லூரி 9 விக்கெட் வித்தியாசத்தில் கோஜன் அணியையும், எல் அண்ட் ஜி பொன்னேரி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அன்னை வயோலெட் கல்லூரியையும் தோற்கடித்தன. இந்த போட்டி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story