உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்ய முடிவு ...


உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்ய முடிவு ...
x
தினத்தந்தி 19 Oct 2023 8:11 AM GMT (Updated: 19 Oct 2023 8:15 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

புனே,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி தேவையாகும்.

உலகக் கிரிக்கெட் திருவிழாவில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 17-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை போட்டியை சூப்பராக தொடங்கி இருக்கிறது. மூன்று வெற்றிகளுடன் இந்திய அணி புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் பரம எதிரி போல் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நிற்பார்கள். இதனால் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா பிளேயிங் 11 : ரோஹித் சர்மா(கேப்டன் ), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

வங்கதேசம் பிளேயிங் 11: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷாந்தோ(கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(கேப்டன்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்


Next Story