அஜித்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்


அஜித்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
x
தினத்தந்தி 4 April 2024 6:01 AM GMT (Updated: 5 April 2024 4:17 AM GMT)

நடராஜனுக்கு நடிகர் அஜித் கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஐதராபாத்,

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக் விளையாடி வருகிறார். இந்த நிலையில், நடராஜன் இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக ஐதராபாத்தில் நேற்று இரவு நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித்குமார் வருகை தந்து நடராஜனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் நடராஜனுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Next Story