ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக சென்னை புறப்பட்டார் சி.எஸ்.கே வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான்


ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக சென்னை புறப்பட்டார் சி.எஸ்.கே வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான்
x

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.

டாக்கா,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து தங்கள் வீரர்களை பயிறிசியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த பயிற்சி முகாம்களில் வீரர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான்

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாத அவரை பயிற்சியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

ஏற்கனவே மதிஷா பதிரான ஐ.பி.எல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார் என்பதால் முஸ்தாபிசுர் ரஹ்மானை அந்த இடத்தில் ஆட வைக்கலாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் அந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐ.பி.எல் 2024-க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள், அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். என பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் கலந்து கொள்ள உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த பதிவை அடுத்து சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story