உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் சென்னை வருகை


உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் சென்னை வருகை
x

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வருகிற 8-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

சென்னை,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வருகிற 8-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இதையொட்டி கோலி, பும்ரா, அஸ்வின், ஜடேஜா, சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய அணியினரும், ஆஸ்திரேலிய அணியினரும் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அடுத்த இரு நாட்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஆமதாபாத்தில் நடந்த கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் சென்றிருந்ததால் அவர்கள் அணியினருடன் வரவில்லை. தாமதமாக இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story