லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை என்ன..?


லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை என்ன..?
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக சென்னை தோல்வியடைந்தது.

சென்னை,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 39 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த சென்னை 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் கண்டு 8 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இதனையடுத்து சென்னை, தனது அடுத்த போட்டியில் வரும் 28-ம் தேதி ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

தற்போது வரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.


Next Story