தோனிக்கு திடீர் காயம்... குஜராத்துக்கு எதிரான இன்றைய தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா..?


தோனிக்கு திடீர் காயம்... குஜராத்துக்கு எதிரான இன்றைய தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா..?
x

கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் தோனி பங்கேற்கவில்லை.

அகமதாபாத்,

ஐபிஎல் முதல் போட்டியில் கேப்டன் தோனி விளையாடுவார் என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறி உள்ளார். கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் தோனி பங்கேற்கவில்லை.

இதனால் முதல் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முதல் போட்டியில் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதனை உறுதி செய்யும் விதமாக, தல பத்ரம் என சென்னை அணி ட்வீட் செய்துள்ளது. எனினும், காயம் காரணமாக ஒருவேளை தோனி ஆடாவிட்டால் கான்வே அல்லது ராயுடு கீப்பிங் செய்வார்கள் என்றும் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story