இந்திய டி20 அணியில் 6வது வரிசையில் ஹூடாவிற்கு பதிலாக இவரை ஆட வைக்கலாம் - தினேஷ் கார்த்திக்


இந்திய டி20 அணியில் 6வது வரிசையில் ஹூடாவிற்கு பதிலாக இவரை ஆட வைக்கலாம் - தினேஷ் கார்த்திக்
x

Image Courtesy: Twitter 

இந்திய டி20 அணியில் 6வது வரிசையில் ஹூடாவிற்கு பதிலாக இந்த வீரரை ஆட வைக்கலாம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளா

மும்பை,

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வந்து தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவர் ஒரு காரணமாக இருந்தாலும், பேட்டிங்கில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் முக்கியமாக இந்திய டி20 அணியில் தோனியின் ஓய்வுக்கு பின்னர் 6வது வரிசையில் ஒரு சிறந்த பினிஷர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு பல்வேறு வீரர்களை பயன்படுத்தி வருகிறது. அந்த இடத்தில் ஆட தீபக் ஹூடாவை இந்திய அணி பயிற்சி செய்து வருகிறது.

ஆனால் தீபக் ஹூடா அதிரடி காட்ட வேண்டிய நேரத்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்கிறார். கடந்த டி20 போட்டியில் கூட தீபக் ஹூடா தனது விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால் இந்திய அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கலாம்.

இந்நிலையில் இந்திய டி20 அணியில் தீபக் ஹூடாவை 6வது இடத்தில் ஆட வைக்காமல் இந்த வீரரை அந்த இடத்துக்கு பயன்படுத்தலாம் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

5,6 மற்றும் 7வது தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினமான விஷயம். அதிலும் குறிப்பாக 6 மற்றும் 7வது வரிசையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிக மிக கடினமான விஷயம். தீபக் ஹூடா 3வது வருசையில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், அதே ஆட்டத்தை அவரால் 6 மற்றும் 7வது வரிசையில் வெளிப்படுத்த முடியவில்லை. இது அவருக்கு ஒரு மிகப்பரிய சவாலாக இருக்கும்.

ஐபிஎல்லில் லக்னோ அணியை தவிர அவர் மற்ற அணிக்காக ஆடும் போது பினிஷர் ரோலில் அவர் சிறப்பான ஆட்டத்தை காட்டவில்லை. அவர் தன்னை ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக பார்க்கிறார். அவர் பவர்பிளேயில் பேட்டிங் ஆட விரும்புகிறார். அவர் சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 6வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். அது அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

ஜித்தேஷ் சர்மா 6வது வரிசை வீரர். அவர் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறார். எனவே அவரால் அங்கு பேட்டிங் ஆட முடியும். அவர் அந்த இடத்தில் ஏற்கனவே பேட்டிங் செய்துள்ளார், அவர் அந்த இடத்தில் பேட்டிங் செய்ய பயிற்சி பெற்றுள்ளார். ஆனால் இந்த தொடரில் அவர் ஆடுவதை நான் பார்க்கவில்லை. இப்போது அதில் ஹூடா ஆடுகிறார். தீபக் ஹூடாவை அணியில் இருந்து நீக்க முடிவு செய்தால் அவரை நீக்குவதற்கு முன்னர் அவருக்கு 3வது வரிசையில் பேட்டிங் ஆட வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
  • chat