தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாட தடுமாறினார் எனவே .... - ரசல் பேட்டி


தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாட தடுமாறினார் எனவே .... -  ரசல் பேட்டி
x

Image Courtesy: AFP 

இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனலாம்.

கொல்கத்தா,

ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை கொல்கத்தாவில் நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனலாம்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. ஏற்கனவே சொன்னது போல் நான் எப்போதும் என்னுடைய பந்து வீச்சுக்கு ஆதரவு கொடுக்கிறேன். முக்கியமான நேரத்தில் என்னால் பந்து வீச்சில் அசத்த என்பது எனக்கு தெரியும். அதிர்ஷ்டமாக அது இன்று நடந்தது.

நான் பேட்டிங் செய்யும் போது குறைவான வேகத்தில் வந்த பந்துகளை அடிப்பது கடினமாக இருந்தது. எனவே பவுலராக நானும் அதை செய்ய விரும்பினேன். அதை பயன்படுத்தி 2 செட்டிலான பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கியது மகிழ்ச்சி. அது தான் போட்டியை மாற்றியது என்று நினைக்கிறேன். சுனில் நரேன் எடுத்த 2 முக்கிய விக்கெட்டுகளும் ஆர்சிபி'யின் சரிவுக்கு வழி வகுத்தது. கடைசி நேரத்தில் 2 ஓவர்கள் இருந்த போது நான் 19 ஓவரை வீச நிபந்தனை விதித்துக் கொண்டேன்.

அதில் சிறப்பாக விளையாடி முடிந்தளவுக்கு கடைசி ஓவரில் ஸ்டார்க்கிற்கு அதிக ரன்கள் கொடுக்க முயற்சிப்பேன். இன்று தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினார். எனவே 19வது ஓவரில் 6 பந்துகளையும் அவருக்கே வீசி கலக்க முயற்சித்தேன். அதிர்ஷ்டவசமாக அது வேலை செய்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story