துலீப் கிரிக்கெட்: மத்திய மண்டலம் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!


துலீப் கிரிக்கெட்: மத்திய மண்டலம் அரையிறுதிக்கு முன்னேற்றம்...!
x

துலீப் கிரிக்கெட் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் மோதின.

மும்பை,

துலீப் கிரிக்கெட் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் அணி 182 ரன்னில் சுருண்டது. பின்னர் கிழக்கு மண்டலம் 122-ல் ஆல்அவுட் ஆனது. 60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மத்திய மண்டலம் அணி 239 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

ஒட்டுமொத்தமாக 299 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், கிழக்கு மண்டலம் அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்சில் 122 ரன்கள் எடுத்த கிழக்கு மண்டலம், 2-வது இன்னிங்சில் 129 ரன்னில் சுருண்டது.

இதனால் மத்திய மண்டலம் 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஜூலை 5-ந்தேதி தொடங்கும் அரையிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம் அணி மேற்கு அல்லது தெற்கு மண்டல அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டும் வீழ்த்திய சவுரப் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Next Story