முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து


முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து
x

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

கராச்சி,

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலெக்ஸ் ஹாலெஸ் (53 ரன்), ஹாரி புரூக் (42 ரன்) வெற்றிக்கு உதவினர்.

17 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story