17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி


17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
x

image tweeted by @englandcricket

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி இருந்தது.

கராச்சி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2005 ஆன் ஆண்டுக்கு பிறகு பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்தது. இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சென்று விளையாட உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டி அட்டவணையை வெளியிட்டு உள்ளது.

இதன்படி 7 போட்டிகளி கொண்ட டி20 தொடர் கராச்சி மற்றும் லாகூர் மைதானங்களில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story