ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு


ஆண்கள் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு
x

பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில்,

" இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்" என்றார்.

1 More update

Next Story