'ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் விளையாடவில்லை என்றாலும்...' - ரிக்கி பாண்டிங் வைத்த கோரிக்கை...!


ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் விளையாடவில்லை என்றாலும்... - ரிக்கி பாண்டிங் வைத்த கோரிக்கை...!
x

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார்.

மும்பை,

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் இந்த பாதியில் இருந்து முழுமையாக மீள குறைந்தது 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே டெல்லி அணி நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடருக்கு வர வேண்டும் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவை. ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், சிரிப்புகள், அணியை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வது போன்றவை கண்டிப்பாக டெல்லி அணிக்கு தேவை. எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகிவிட்டால் போதும், ஐபிஎல் போட்டிகளின் போது டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருக்க வேண்டும்.

மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும். அப்போது இருந்து அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட், என்னுடம் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.


Next Story