முதலாவது அரைஇறுதி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்


முதலாவது அரைஇறுதி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்
x

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரைஇறுதியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை,

10 அணிகள் பங்கேற்ற 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்பட 6 அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

உள்நாட்டு ரசிகர்களின் அமோக ஆதரவுடன் பட்டையை கிளப்பும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அட்டகாசமாக தொடங்கியது. அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதால் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலானது. கடைசி லீக்கில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து ஒரு வழியாக அரைஇறுதியை எட்டிப்பிடித்தது. எல்லா வகையிலும் இந்தியாவுக்கு நிகராக நியூசிலாந்து அணி வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

நியூசிலாந்து: கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டாம் லாதம், மிட்செல் சான்ட்னெர், லோக்கி பெர்குசன், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.


Next Story