முதல் டி20 போட்டி; வார்னர் அதிரடி - ஆஸ்திரேலியா 213 ரன்கள் குவிப்பு


முதல் டி20 போட்டி; வார்னர் அதிரடி - ஆஸ்திரேலியா 213 ரன்கள் குவிப்பு
x

image courtesy; PTI

தினத்தந்தி 9 Feb 2024 9:49 AM GMT (Updated: 9 Feb 2024 10:03 AM GMT)

ஆஸ்திரேலியா அணி தரப்பில் டேவிட் வார்னர் 70 ரன்கள் அடித்தார்.

ஹோபர்ட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹோபர்ட்டில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வார்னர் மற்றும் இங்கிலிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இங்கிலிஸ் 39 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 16 ரன், மேக்ஸ்வெல் 10 ரன், ஸ்டோய்னிஸ் 9 ரன் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆட உள்ளது.


Next Story