வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 59/2


வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 59/2
x

Image Courtesy: @ICC

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

அடிலெய்டு,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்கன்சி 50 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஸ்மித் 12 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய லபுஸ்சாக்னே 10 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேமரூன் க்ரீன் களம் இறங்கினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 59 ரன்கள் எடுத்துள்ளது. 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Next Story