தொடக்கம் நன்றாக இருந்தாலும் அதனை அப்படியே கொண்டு செல்ல முடியவில்லை - இப்ராகிம் ஜட்ரான்


தொடக்கம் நன்றாக இருந்தாலும் அதனை அப்படியே கொண்டு செல்ல முடியவில்லை - இப்ராகிம் ஜட்ரான்
x

Image Courtesy: AFP

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்தூர்,

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 68 ரன், ஷிவம் துபே 63 ரன் எடுத்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராகிம் ஜட்ரான் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டியில் இன்னும் சற்று அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும். எங்களுடைய இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் நன்றாக இருந்தாலும் அதனை அப்படியே கொண்டு செல்ல முடியவில்லை. ஒருமுறை நாங்கள் துவக்க ஓவர்களில் நன்றாக விளையாடுகிறோம்..

ஒருசில முறை மிடில் ஓவர்களில் நன்றாக விளையாடுகிறோம். ஒருசில முறை இறுதிகட்ட ஓவர்களில் சிறப்பாக விளையாடுகிறோம். ஆனால் டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அப்படி தவறுகளை செய்யாமல் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலக கோப்பையை கைப்பற்ற முடியும்..

குல்புதீன் நைப் எங்கள் அணியில் உள்ள சீனியர் வீரர். அவர் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர் சில ஷாட்களை பவர்பிளே ஓவர்களில் அடிக்க ஆரம்பித்து விட்டால் நிச்சயம் அதனை இன்னிங்ஸ் முழுவதும் எடுத்துச் செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story