ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி... புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது


ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி... புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது
x

ஐபிஎல்-லில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர்,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ஜோஸ் பட்லர் களமிறங்கினர். தொடக்கத்தில் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் சிறப்பாக விளையாடிய சாம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் 2ரன்கள் , பராக் 4ரன்கள் , படிக்கல் 12ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஹெட்மையர் 7 ரன்கள் , ஜூரல் 9 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 17.5 ஓவர்களுக்கு விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். குஜராத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும் , நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 119 ரன்கள் இலக்குடன் குஜராத் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், விருத்திமான் சகாவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

கில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் மிரட்டினார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் விளாசினார். சகா பொறுப்புடன் விளையாடி 41 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு வெற்றிபெற சிறிய வாய்ப்பு கூட குஜராத் அணி வழங்கவில்லை.

இறுதியில் குஜராத் அணி 17.5 ஓவர்களில் இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. அத்துடன் அந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறியது.


Next Story