மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணையும் ஹர்திக் பாண்ட்யா...?


மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணையும் ஹர்திக் பாண்ட்யா...?
x

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார்.

மும்பை,

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களின் வீரர்களை பரிமாற்றிக்கொள்ளலாம். மேலும், வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கலாம்.

இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார். அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கபட்டார். அந்த ஆண்டு குஜராத் அணி ஐபிஎல் பட்டம் வென்றது. அதேபோல், கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2ம் இடம் பிடித்தது.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் ஏலத்திற்கு முன்பு அணிகள் தங்களிடம் உள்ள வீரர்களை விடுவிக்கவும், பரிமாறிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story