ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் கோலி சதம் அடிப்பார்- இலங்கை வீரர் நம்பிக்கை


ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் கோலி சதம் அடிப்பார்- இலங்கை வீரர் நம்பிக்கை
x

Image Tweeted By @imVkohli

சர்வதேச போட்டியில் விராட் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது.

துபாய்,

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் இந்திய அணி தங்கள் 2-வது லீக் போட்டியில் ஹாங்காங் அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி தனது 71-வது சர்வதேச சதத்தை அடிப்பார் என இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச அளவில் விராட் கோலி சதம் அடித்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது.

இதனால் ஒவ்வொரு போட்டியில் அவர் களமிறங்கும் போதும் அவர் மீண்டும் பார்முக்கு வர வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இருப்பினும் விராட் கோலி மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்க தொடர்ந்து திணறி வருகிறார்.

கோலி குறித்து பேசிய மகேஷ் தீக்சனா கூறுகையில், " இந்தியாவுக்கு எதிராக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறேன். அந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்க விரும்புகிறேன். அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர்.

எதிர்வரும் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது 71வது சதத்தை அடிப்பார் என நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


Next Story