2015 உலகக்கோப்பையில் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் - ஆப்கானிஸ்தான் வீரர்


2015 உலகக்கோப்பையில் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் - ஆப்கானிஸ்தான் வீரர்
x

2015 உலகக்கோப்பையில் தோனி கூறிய அறிவுரையை நான் இன்றும் பின்பற்றுகிறேன் என ஆப்கானிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.

துபாய்,

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் இந்திய அணிக்காக அனைத்து வித உலகக்கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். அனைத்து வித கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் இவர் மட்டுமே. டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்து உலக கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த வீரர்ராக மாறினார் தோனி.

இவர் ஆடும் காலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக அளவில் அறிவுரைகளை வழங்குவார். அது இந்திய வீரர்களாக இருந்தாலும் சரி, எதிரணி வீரர்களாக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு அவர் இளம் வீரர்களுக்கு அறிவுரைகளை வங்குவார், இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 82 ஒருநாள், 86 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இளம் வீரரான நஜிபுல்லா ஜட்ரான் தோனி எனக்கு வழங்கிய அறிவுரையை நான் இன்றும் கடைபிடித்து வருகிறேன் என தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போது சர்வதேச லீக் டி20 தொடரில் மும்பை எமிரேட்ஸ் அணிக்காக ஆடி வரும் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

தோனியை எனது ரோல் மாடலாக கருதுகிறேன். அவர் ஒரு இன்னிங்சை முடிப்பது போல் யாராலும் முடிக்க முடியாது. அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். 2015 உலகக்கோப்பை தொடரின் போது அவரிடம் நான் பேசும் போது, அவர் என்னை அமைதியாக இருங்கள், அதிக அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் கூட உங்களை நீங்கள் நம்புங்கள் என்றார். நான் இன்னும் அந்த அறிவுரையை நம்புகிறேன் மற்றும் பின்பற்றுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story