இது என்னுடைய சிறந்த ஐ.பி.எல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன் - ஆட்டநாயகன் பட்லர் பேட்டி


இது என்னுடைய சிறந்த ஐ.பி.எல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன் - ஆட்டநாயகன் பட்லர் பேட்டி
x

Image Courtesy: AFP 

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து பட்லர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தொடர்ந்து நம்ப வேண்டும் என்பதே இன்றைய வெற்றியின் சாவியாகும். ஆரம்பத்தில் நான் தடுமாறினேன். அது போன்ற நேரத்தில் நீங்கள் கடுப்பாவது போல் உணர்வீர்கள் அல்லது உங்கள் மீது கேள்வி எழுப்புவீர்கள்.

அப்போது பரவாயில்லை தொடர்ந்து அமைதியாக விளையாடுவோம் என்று எனக்கு நானே சொன்னேன். ஐ.பி.எல் தொடரில் பல வேடிக்கையான தருணங்கள் நிகழ்ந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தோனி, கோலி போன்றவர்கள் கடைசி வரை நம்பிக்கையுடன் நின்று பினிஷிங் செய்ததை நாம் பார்த்துள்ளோம். அதையே இன்று நான் பயன்படுத்தினேன்.

எப்போதும் திருப்புமுனை ஒன்று இருக்கும் என்பது போன்ற நிறைய விஷயங்களை சங்ககாரா என்னிடம் கூறியுள்ளார். உங்களுடைய விக்கெட்டை கொடுக்க போராடாமல் இருப்பதே மோசமான செயல். எனவே கடைசி வரை நின்றால் ஏதோ ஒரு தருணத்தில் போட்டி மாறும் என்று அவர் என்னிடம் சொன்னார். இது என்னுடைய சிறந்த ஐ.பி.எல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அதற்காக திருப்தியடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story