ஐசிசி-யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற 2 பாகிஸ்தான் வீரர்கள்...!!


ஐசிசி-யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற 2 பாகிஸ்தான் வீரர்கள்...!!
x

image courtesy; ICC

ஐசிசி-யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஷதாப் கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு புதுமுக வீராங்கனைகள் பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் நெதர்லாந்தை சேர்ந்த ஐரிஸ் ஸ்வில்லிங், மலேசிய வீராங்கனை ஐன்னா ஹமிசா ஹாஷிம் மற்றும் அயர்லாந்தை சேர்ந்த அர்லீன் கெல்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.


Next Story