ஐ.சி.சி. அணிகள் தரவரிசை: 3 வடிவிலான போட்டிகளிலும் இந்தியாவின் நிலை என்ன..?


ஐ.சி.சி. அணிகள் தரவரிசை: 3 வடிவிலான போட்டிகளிலும் இந்தியாவின் நிலை என்ன..?
x

image courtesy: AFP

3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்கு தள்ளி நடப்பு டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன.

டி20 போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து 3-வது இடத்தில் உள்ளது.

3 வடிவிலான போட்டிகளின் தரவரிசையிலுமே இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story