ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை : முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கும் ரோகித் சர்மா, விராட் கோலி

Image Courtesy : AFP
ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார்
மும்பை,
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசேன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து 2-வது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரவி அஸ்வின் 2-வது இடத்திலும் , 3-வது இடத்திலும் ஜஸ்பிரீத் பும்ரா-வும் உள்ளனர்.
ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார்.






