தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா...இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு...!
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்ட்யா தலைமயிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் அசத்தினர்.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்க இலங்கை அணி கடுமையாக முயற்சிக்கும்.
இந்நிலையில், இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.