பார்டர் கவாஸ்கர் கோப்பை 3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கே.எல். ராகுல் நீக்கம்


பார்டர் கவாஸ்கர் கோப்பை 3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு - கே.எல். ராகுல் நீக்கம்
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம்பெறவில்லை.

வீரர்கள் விவரம்:-

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர், ஜடேஜா, ஸ்ரீகர் பரத், அக்சர் படேல், ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா:-

உஸ்மன் குவாஜா, டிரவெஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் கென்ஸ்ட்காம், கமரூன் கிரீன், அலெக்ஸ் கார்னி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், டுடி மொர்பி, மெதிவ் குஹ்னிமென்.


Next Story